இதழோடு இதழ் சேரும் நேரம்
இன்பங்கள் ஆறாக ஊறும்
இதழோடு இதழ் சேரும் நேரம்
இன்பங்கள் ஆறாக ஊறும்
மடிமீது தலை வைத்து
மடிமீது தலை வைத்து
கண்ணே உன்னோடு நான்
கதை சொல்ல வேண்டும்
இதழோடு
இதழோடு இதழ் சேரும் நேரம்
இன்பங்கள் ஆறாக ஊறும்
என் பேரை மறந்து நான் இருந்தேன்
நீ எந்தன் நினைவாக வந்தாய்
ஏன் உன்னை பிரிந்து நான் பறந்தேன்
உன் கண்ணில் உயிர் தேடி வந்தேன்
கச்சேரி கேளாத இசை உண்டு மானே
நாம் சிந்தும் முத்தங்கள் சங்கீதம் தானே
என் மேனி உன் மார்பில் தானே
என் மேனி உன் மார்பில் தானே
இதழோடு இதழ் சேரும் நேரம்
இன்பங்கள் ஆறாக ஊறும்
சில நாளாய் துடித்தன விழிகள்
ஏனென்று கேளுங்கள் நீங்கள்
கண் தூக்கம் மறந்தன இமைகள்
நீ இன்றி நகராது நாட்கள்
கண்ணா உன் உயிரோடு உயிராகிப் போனேன்
பிணி தீர்க்க நான் வந்து நோயாகிப் போனேன்
நான் உந்தன் மருந்தாக ஆனேன்
நான் உந்தன் மருந்தாக ஆனேன்
இதழோடு இதழ் சேரும் நேரம்
இன்பங்கள் ஆறாக ஊறும்
மடிமீது தலை வைத்து
கண்ணா உன்னோடு நான்
கதை சொல்ல வேண்டும்
இதழோடு இதழ் சேரும் நேரம்
இன்பங்கள் ஆறாக ஊறும்
Related Posts
SPB
September 23, 2024
0