தணிகை வாழும் முருகா உன்னைக்
காண காண வருவேன்
என்னைக் காத்துக் காத்து அருள்வாய்
திருத் தணிகை வாழும் முருகா
உன்னைக் காண காண வருவேன்
என்னைக் காத்துக் காத்து அருள்வாய்
ஆறு படை உனது, ஏறுமயில் அழகு,
தேடாத மனம் என்ன மனமோ,
ஆறு படை உனது, ஏறுமயில் அழகு,
தேடாத மனம் என்ன மனமோ
வேல் கொண்டு விளையாடும் முருகா
வேதாந்த கலைஞானத் தலைவா
திரு நீறில் தவழ்ந்து ஆடும் பாலா
உன்னைப் பாடிப் பாடி மகிழ்ந்தேன்
திருத்தணிகை வாழும் முருகா
உன்னைக் காண காண வருவேன்
என்னைக் காத்துக் காத்து அருள்வாய்
ஆறுமுகம் அழகு அருட்பழம் முருகு
சொல்லாத நாளென்ன நாளோ
தேனோடு தினை மாவும் தரவா?
தமிழாலே கனிப்பாகும் தரவா?
தேனோடு தினை மாவும் தரவா?
தமிழாலே கனிப்பாகும் தரவா?
குமரா உன் அருள் தேடி வரவா?
எதிர் பார்த்துப் பாரத்து இருப்பேன்
திருத் தணிகை வாழும் முருகா
உன்னைக் காண காண வருவேன் என்னைக்
காத்துக் காத்து அருள்வாய்
என்னைக் காத்துக் காத்து அருள்வாய்
Related Posts
SPB
September 27, 2024
0