🎧 தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும்

My Karaoke collabs & solos


தென்றல் உறங்கிய போதும்
திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா

தென்றல் உறங்கிய போதும்
திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா

ஒன்று கலந்திடும் நெஞ்சம்
உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா

நீல இரவிலே
தோன்றும் நிலவை போலவே
நிலவை போலவே
வாழைக் குமரியே
நீயும் வந்த போதிலே
வந்த போதிலே

நேசமாக பேசிடாமல்
பாசம் வளருமா
ஆசை தீர கொஞ்சிடாமல்
இன்பம் மலருமா
நேசமாக பேசிடாமல்
பாசம் வளருமா
ஆசை தீர கொஞ்சிடாமல்
இன்பம் மலருமா

அன்பை நினைந்தே ஆடும்
அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா

இதய வானிலே
இன்ப கனவு கோடியே
கனவு கோடியே
உதயமாகியே
ஊஞ்சல் ஆடும் போதிலே
ஆடும் போதிலே

வானம்பாடி ஜோடி கானம்
பாட மயங்குமா
வாச பூவும் தேனும் போல
வாழத் தயங்குமா
வானம்பாடி ஜோடி கானம்
பாட மயங்குமா
வாச பூவும் தேனும் போல
வாழத் தயங்குமா

அன்பை நினைந்தே ஆடும்
அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா

ஒன்று கலந்திடும் நெஞ்சம்
உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
September 30, 2024
0

Search

Archive

Contact me

Total Pageviews