🎧 எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை...

My Karaoke collabs & solos

  
எங்கள் வீட்டில்
எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை

எங்கள் வீட்டில்
எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை

கிளி கூட்டம் போல் எங்கள் கூட்டமே
இது ஆனந்த பூந்தோட்டம்
அன்பின் ஆலயம்

எங்கள் வீட்டில்
எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை

பாடும் பறவை கூட்டங்களே
பாசத்தின் மொழியைக் கேளுங்கள்
அண்ணன் என்ற சொந்தமே
அன்னை ஆனதை பாருங்கள்

சிலுவைகளை நீ சுமந்து
மாலைகள் எமக்கு சூட்டினாய்
சிறகடிக்கும் பறவைக்கெல்லாம்
வானத்தை போல மாறினாய்

விழியோடு நீ குடையாவதால்
விழிகள் நனைவதில்லை
நெஞ்சில் பூமழை

எங்கள் வீட்டில்
எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை

எங்கள் சொந்தம் பார்த்தாலே
சொர்க்கம் சொக்கி போகுமே
எங்கள் வீட்டில் பூத்தாலே
பூவின் ஆயுள் கூடுமே

இரண்டு கண்கள் என்றாலும்
பார்வை என்றும் ஒன்றுதான்
உருவத்திலே தனித்தனிதான்
உள்ளம் என்றும் ஒன்றுதான்

ஒரு சேவல் தான் அடைகாத்தது
இந்த அதிசயம் பாருங்கள்
அண்ணனை வாழ்த்துங்கள்

எங்கள் வீட்டில்
எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை

கிளி கூட்டம் போல்
எங்கள் கூட்டமே
இது ஆனந்த பூந்தோட்டம்
அன்பின் ஆலயம்
October 02, 2024
0

Search

Contact me

Total Pageviews