🎧நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே
நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம்
ஏதும் இல்லை நடந்ததையே
நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
முடிந்த கதை தொடர்வதில்லை
இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை
மனிதன் வீட்டினிலே

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால்
அமைதி என்றுமில்லை

ஆயிரம் வாசல் இதயம் 
அதில் ஆயிரம்
எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார்
வருவதும் போவதும் தெரியாது
ஒருவர் மட்டும் குடியிருந்தால்
துன்பம் ஏதுமில்லை
ஒன்றிருக்க ஒன்று வந்தால்
என்றும் அமைதி இல்லை

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால்
அமைதி என்றுமில்லை

எங்கே வாழ்க்கை தொடங்கும்
அது எங்கே எவ்விதம் முடியும்
இது தான் பாதை இது தான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது
பாதை எல்லாம் மாறி வரும்
பயணம் முடிந்து விடும்
மாறுவதை புரிந்துக் கொண்டால்
மயக்கம் தெளிந்துவிடும்

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால்
அமைதி என்றுமில்லை
முடிந்த கதை தொடர்வதில்லை
இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை
மனிதன் வீட்டினிலே

நினைப்பதெல்லம் நடந்துவிட்டால்
தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால்
அமைதி என்றுமில்லை

Kannadasan
June 04, 2016
0

Comments

Search

Contact me

Total Pageviews

© 2025 Jeeva Ragam. All Rights Reserved.